fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2023 12:48

ஒக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும்

ஒக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வறட்சியின் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி திறன் தேசியத் தேவையில் 15 சதவீதமாக குறைந்துள்ளதாக

இலங்கை மின்சார சபை தேவையில் 65 சதவீதத்திற்கு அனல் மின்சாரத்தையே சார்ந்துள்ளது, இதன் விளைவாக உற்பத்தி செலவு ரூ.800 மில்லியனில் இருந்து ரூ.1,200 மில்லியனாக உயர்ந்துள்ளது.

“கடந்த ஆண்டின் இதே காலத்தில், போதுமான அளவு மழை பெய்துள்ளது. நீர்த்தேக்கங்கள் நிரம்பின. சில சமயங்களில், 70 சதவீத தேவைக்கு நீர்மின்சாரத்தை நம்பியிருந்தோம். இன்று, 15 சதவீதமாக குறைந்துள்ளது,” என்றார்.

மின்சார சபையானது தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2023 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க