fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2023 09:15

இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி

இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் பணிப்பாளர் வான் யீ இதனைத் தெரிவித்துள்ளதார்.

இலங்கையின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் தேசிய பெருமையை பாதுகாப்பதற்கு சீனா பலமாக ஆதரவளிப்பதாகவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெற்று வரும் 07வது சீன – தெற்காசிய கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே வான் யீ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுயாதீன அபிவிருத்திக்கான திறனை மேம்படுத்தவும், வறுமைப் பொறியிலிருந்து விடுபடவும், தொழில்மயமாக்கல் செயல்முறை மற்றும் விவசாய நவீனமயமாக்கலை விரைவுபடுத்தவும் சீனா உதவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சீனாவின் நிரந்தர ஆதரவு, கடினமான காலங்களில் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள ஆதரவு அளித்தமைக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியை இதன்போது தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2023 09:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க