600இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்
Related Articles
கடந்த 6 மாதங்களில் 600இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போது அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் சுமார் 6000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், அரச பல்கலைக்கழக முறைமையும் படிப்படியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.