இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா
Related Articles
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தி உள்ளார். இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் “Nation First, Always First” என்ற பொருளுடன் சிறப்பிக்கப்படும்
இன்றைய நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்களை அனுசரிக்கும் நாளாகத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து, ஊர்வலம் மற்றும் கலாச்சார கொண்டாட்டங்கள் அரங்கேறும்.
சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நாளன்று நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் சுதந்திர தின கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
அனைத்து உறவுகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.