தட்டுப்பாடு நிலவிய 14 வகையான மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாடு 242 ஆக குறைவடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய கடனுதவி திட்டத்தினூடாக நூற்றுக்கும் அதிக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்த மாதத்திற்குள் இந்த மருந்துகள் நாட்டிற்கு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.