3 மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தீவிர சிகிச்சைப் பிரிவில்
Related Articles
கஹவத்தை மத்திய மகா வித்தியாலயத்தின் ஒன்பதாம் தர மாணவன் ஒருவர் அதே பாடசாலையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மாணவன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நீதியான விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரி பிரதேசவாசிகள் சிலர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.