கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறுத்தக்கூடிய ஒரே நிறுவனம் பாராளுமன்றம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தெங்கு உற்பத்தியாளர் சங்கத்தின் 29வது வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (04) இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக ஏனைய நிறுவனங்களிடமிருந்து உத்தரவுகளைப் பெற முயற்சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.