வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக சணச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் ஸ்தாபகரான கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 5 வருடங்களுக்கு வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய செயற்படவுள்ளார்.