பௌத்த விகாரைகள் உட்பட அனைத்து சமய ஸ்தலங்களின் சொத்துக்கள் பற்றிய விபரப்பட்டியலை மேற்கொள்ள புத்த சாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மகாநாயக்க தேரர்கள் மற்றும் சர்வ மதத் தலைவர்களின் இணக்கப்பாட்டின் பேரில் அமைச்சின் சமய அலுவல்கள் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் நிதி பெறும் முறைகள், அந்த இடங்கள் குறித்த சரியான தகவல்கள் இல்லாமை, கோயில்களில் யானைகள் இருப்பது குறித்து அமைச்சகத்தில் தகவல் இல்லாதது போன்ற பிரச்னைகள் இந்த கணக்கெடுப்புக்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.