எல்ல காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
Related Articles
எல்ல ஒன்பது வளைவுப் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பாரிய காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை காப்புக்காடு பகுதியில் தீ பரவியதாக கூறப்படுகிறது.
சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று, இலங்கை விமானப்படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளனர்.
பண்டாரவளை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், இலங்கை விமானப்படை, இலங்கை இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்