எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்
Related Articles
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத்தின் பதவிக் காலம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 5 முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.