இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.