அதிவேக வீதிகளில் இடம்பெற்ற திருட்டுகளால் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபா நட்டம்
Related Articles
புதிய களனி பாலம் மற்றும் அதிவேக வீதிகளில் இடம்பெற்ற திருட்டுகளால் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மத்திய நெடுஞ்சாலையில் 286 மில்லியன் ரூபா பெறுமதியான செப்பும் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரும்பும் திருடப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
2.9 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு வேலியும் சேதப்படுத்தப்பட்டு, திருடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இவை அனைத்தினதும் மொத்த பெறுமதி 294. 4 மில்லியன் ரூபா. மேலும், களனி பாலத்தில் GI குழாய்கள், அதிக கணமான VVC குழாய்கள், தொடர்பாடல் கட்டடத்தில் தகவல் கணனி அமைப்பின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளின் வெளிப்புறமாக பொருத்தும் இயந்திரங்களின் பாகங்கள், ஔி வடிவங்களை உருவாக்கும் விளக்குகளும் திருடப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 5.9 மில்லியன் ரூபா என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.