ஒவ்வாமை காரணமாக நோயாளர்கள் சிலர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை அறிக்கையை 03 வாரங்களில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக குழுவின் உறுப்பினர், வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று(18) கூடி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வாமை காரணமாக நோயாளர்கள் சிலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் 06பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவன பணிப்பாளர், வைத்தியர் தேதுனு டயஸின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.