சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் தமது வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு அத்தியாவசியமான மற்றும் சேவைகளுக்கு இடையூறாக அல்லது தடைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின்சக்தியுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.