பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய (17) கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு இந்தக் குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு ஒன்று கூடி எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதுடன், பல சட்டமூலங்கள் குறித்தும் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கடந்த 13 ஆம் திகதி கூடி, பாராளுமன்றம் நாளை (18) முதல் 21ஆம் திகதி வரை கூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், அந்த தீர்மானத்தில் இதுவரையில் திருத்தம் மேற்கொள்ளப்படாத நிலையில், நாளை பாராளுமன்றம் கூடவுள்ளது.