fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மது விருந்தில் கொலையுண்ட நபர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2023 13:16

மது விருந்தில் கொலையுண்ட நபர்

நண்பர்கள் குழுவொன்று நேற்றிரவு (12) நடத்திய மதுபான விருந்தின் பின்னர் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

மொரகஹஹேன தலகல ஏல காணியொன்றில் தொழிலாளர்கள் குழு ஒன்று கூடி இந்த மதுபான விருந்தை நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், மினுவாங்கொடை மாபொதல இத்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் அகழ்வு இயந்திர சாரதியாக பணிபுரிந்த பி. நிரோஷன் சந்திமா 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சாரதியாக பணியாற்றி வந்த உயிாிழந்த நபர் பணி முடிவடைந்ததால், மற்ற ஊழியர்கள் அவருக்கு மது விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த விருந்தில் பங்கேற்பதற்காக நிரோஷன் சந்திம நேற்று வீட்டில் இருந்து வந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மெல்சிறிபுர பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​கொலை செய்யப்பட்ட நபர் அவரது கழுத்தை நெரித்து தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் கோபமடைந்த அவர் பையில் இருந்த கத்தியை எடுத்து இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏல நிலத்தின் அலுவலகத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், கொலை செய்யப்பட்ட நபரின் தலையில் தலையணை வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தலையணை வைத்தவர் யார் என்று கூற யாரும் முன்வர வில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக வேறு இடத்தில் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஏல நிலத்தின் 07 ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2023 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க