மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மருத்துவ பீடங்களுக்கான இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் இதுவரை நிறுவப்படவில்லை என மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து மருத்துவ பீடங்களிலும் கடுமையான விரிவுரையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக அதன் இணைப்பாளர் நவின் தாரக குறிப்பிட்டார்.
“அனைத்து மருத்துவ பீடங்களிலும் கடுமையான விரிவுரையாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு இது வரை தீர்வு இல்லை. புதிதாக நிறுவப்பட்ட மூன்று மருத்துவ பீடங்களை எடுத்துக்கொண்டால் மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேல், மருத்துவ பீடங்களில் இன்னும் இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் நிறுவப்படவில்லை. இதனால் அந்த இறுதியாண்டு மாணவர்கள் இந்த வருடம் அந்த இறுதியாண்டை ஆரம்பமாகின்றனர். இன்னும் அந்த பேராசிரியர் பிரிவுகளை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை. குறைந்த பட்சம் மொரட்டுவை மருத்துவ பீடத்திற்கான கட்டிடம் கூட இல்லை. மருத்துவ கல்வி இப்படி பல பிரச்சனைகளுடன் செல்கிறது. புதிதாக மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ அரசாங்கம் முயற்சிக்கிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் அது தொடர்பான மருத்துவப் பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.