fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07ஆவது குழுவை இணைத்து கொள்வதற்வதற்கு அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2023 16:20

வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07ஆவது குழுவை இணைத்து கொள்வதற்வதற்கு அமைச்சரவை அனுமதி

அரசு சாரா பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07ஆவது குழுவை இணைத்து கொள்வதற்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த யோசனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன பட்டப்படிப்பை தொடர்வதற்கான முழுமையான காலப்பகுதிக்காக 13 சதவீத குறைந்த வட்டி வீதத்தின் அடிப்படையில் இந்த கடன் திட்டத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்குகே இவ்வாறான வட்டியில்லாத கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2023 16:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க