பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெனலப் வில்லியம்ஸ் எனும் பெண் செவிலியர் ஒரு ஆண் நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இத்தகைய ஒரு நிகழ்வில், நோயாளி இறந்ததால் அந்த செவிலியர் தன் வேலையை இழந்திருக்கிறார். இறந்த நோயாளியுடனான தனது தொடர்பு பற்றி மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தெரிய வந்ததும் இறந்தவருடன் ஒரு வருடத்திற்கும் மேலாக தனக்கிருந்த உறவை ஒப்புக்கொண்டார்.
மருத்துவ அவசர பணியாளர்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்தபோது, நோயாளி அரை நிர்வாண கோலத்தில், சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் இவர்களுக்குள் நடந்த ‘அளவு கடந்த நெருக்கம்,’ ஆபத்தானதாக மாறியுள்ளது.
அந்த நோயாளி இறக்கும்போது, பெனலப் ஆம்புலன்சை அழைக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. நோயாளி அந்த மருத்துவமனையில் சிறுநீரக நோய்க்காக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
நாட்பட்ட சிறுநீரக நோயுடன் ஒரு தூண்டப்பட்ட இதய செயலிழப்பு நிகழ்ந்ததால் அவர் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக நர்சிங் கவுன்சில் குழு விசாரணை நடத்தியது.
பெனலப்பின் சக பணியாளர்களுக்கு இப்போது இறந்துவிட்ட நோயாளியுடனான அவரது விவகாரம் பற்றி தெரிந்திருந்ததாகவும், அவர்களில் சிலர் மோசமான விளைவுகளைப் பற்றி அவரிடம் எச்சரித்ததாகவும், ஆனால் பெனலப் அந்த அறிவுரைகளை புறக்கணித்து விட்டார் எனவும் தெரியவந்தது.
ஆம்புலன்ஸை அழைக்கும்படி சக ஊழியர்கள் கூறியதாகவும், ஆனால் அவர் அதை அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
காரின் பின்புறத்தில் “30 முதல் 45 நிமிடங்கள்” மட்டுமே செலவிட்டதாகவும், இருவரும் “வெறுமனே பேசிக் கொண்டு மட்டுமே இருந்ததாக” செவிலியர் பெனலப் கூறியிருக்கிறார்.
நீண்ட நாட்களாக குற்றத்தை மறுத்து வந்த அவர், மே மாதம் நடந்த விசாரணையின் போது, இறந்தவருடனான தனது உறவை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.