பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது அரசாங்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
Related Articles
பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது மதம் அல்லது வேறு எந்த அமைப்பினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாராக இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.