அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு வெள்ளை பவுடர் போன்று ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் அது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த சமயத்தில் அதிபர் ஜோபை டன் வெள்ளை மாளிகையில் இல்லை.
வெள்ளை மாளிகைக்கு உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.
முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது.
பின்னர் மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அது கோகைன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.