நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை காலை 11 மணி வரை அமலில் இருக்கும்.
மேலும், நுவரெலியா பிரதேச செயலகப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீவின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.