நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து நுவரெலியா சென்ற வைத்தியர் ஒருவரே விபத்தில் காயமடைந்துள்ளார்.
பனிமூட்டம் காரணமாக குறித்த வைத்தியர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
காயமடைந்த வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.