தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு நேற்று (03) பறவை இனமொன்று கொண்டுவரப்படவுள்ளது.
தாய்லாந்தில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு இந்த புதிய வகை பறவை இனம் கொண்டுவரப்பட உள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 87வது வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஆண்டு நிறைவையொட்டி, மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு பெயர் சூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்று 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.