கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹோமாகம, மகும்புர பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸுடன் மோதியதில் ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாணந்துறையைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது உடல் பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.