கிளிநொச்சியில் விவசாயிகள் போராட்டம்
Related Articles
நெல்லுக்கான விலையினை உரிய நேரத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இன்று(28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமானது.
கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நெல் சந்தைப்படுத்தல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து.
தற்பொழுது நெல்லினை 48 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கே கொள்வனவு செய்வதாகவும், தமக்கு அறுவடை முடிவில் செலவீனமே 85 ரூபாய் முடிவடைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் அனைத்துமே வெறுமனே காணப்படுவதாகவும், இருப்பினும் நெல் கொள்வனவு உரிய காலத்தில், உரிய விலையில் கொள்வனவு செய்யப்படவில்லை எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
போராட்டத்தின் பின்னா் விவசாயிகள் தமது பிரச்சினை அடங்கிய மனுவை மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகனிடமும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் கையளித்தனர்.