ஆசிரியர் பற்றாக்குறையால் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான 2000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறைக்கு கல்வி அமைச்சு உரிய தீர்வை வழங்காமையே இந்த நிலைக்கு காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.