குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தாயும் மகளும் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்
Related Articles
டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்த வெளிநாட்டு பெண் ஒருவரும், குழந்தையும் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அவர்கள் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன்பு நோயிலிருந்து குணமடைந்தார், ஆனால் அவரது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இருவரும் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் IDH மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வேறு எவரும் அதிகாரிகளால் கண்டறியப்படவில்லை.
குரங்கு காய்ச்சல் என்பது கொவிட்-19 போன்று விரைவாகப் பரவும் ஒரு நோயல்ல என்றும் அது ஏனையவர்களுக்கு பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Monkeypox வைரஸ் தொற்று ஏற்பட்ட 7 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகளைக் காட்டுகிறது. காய்ச்சல், இருமல், சளி, உடல்வலி, கடுமையான தலைவலி, நிணநீர் முனைகளில் வீக்கம், கைகால் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் சீழ் கொண்ட கொப்புளங்கள் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும்.