ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ( SLTDA )வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரை 52,663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 15,406 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவிலிருந்து 4,748 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,905 பேரும், சீனாவிலிருந்து 2,823 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,688 பேரும், கனடாவிலிருந்து 2,503 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மே மாதத்தில் மொத்தம் 83,309 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA குறிப்பிட்டது.
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 577,149 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.