அடுத்த மாதம் முதல் லொத்தர் சீட்டின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் லொத்தர் விநியோகஸ்தர்களின் தரகு பணத்தினை அதிகரிப்பதற்கு இணக்கம் வௌியிடப்படவில்லை என அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
தரகு பணத்தினை அதிகரிக்காவிட்டால், எதிா்வரும் ஜூலை 7ம் திகதி முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகவுள்ளதாக அந்த சங்கத்தின் பொது செயலாளர் பி. எஸ். எஸ். மாரசிங்க தெரிவித்துள்ளாா்.