174 மற்றும் 255 இலக்க வழித்தட பேருந்துகள் பணிபுறக்கணிப்பு
Related Articles
கொட்டாவை – பொரளை மற்றும் கொட்டாவை – கல்கிஸ்ஸை ஆகிய வழித்தடங்களின் தனியார் பேருந்து பணியாளா்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனா்.
அந்த வழித்தடங்களில் 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்காமல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பேருந்து பணியாளா்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.