fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாதாரணதர பரீட்சையின் போது 3மோசடி சம்பவங்கள் நேற்று பதிவு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2023 10:06

சாதாரணதர பரீட்சையின் போது 3மோசடி சம்பவங்கள் நேற்று பதிவு

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பில் நேற்று (06) மூன்று மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் பரீட்சார்த்தி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆசிரியர் ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக கணித வினாத்தாளை அனுப்பி பதில்களைப் பெற்றுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹெனேகம மகா வித்தியாலயம் மற்றும் சீதுவ பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பரீட்சார்த்திகள் கணித வினாத்தாளை தனித்தனியாக ஆசிரியர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி விடைகளைப் பெற அனுப்பிய போது மேற்பார்வையாளர்களால் பிடிக்கப்பட்டனர் .

இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பரீட்சை ஆணையாளர் லசிகா சமரகோன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 7, 2023 10:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க