நியூ டயமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துகள் தொடர்பில் ஆராய விசேட செயற்குழு
Related Articles
நியூ டயமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை முன் வைப்பதற்காக பாராளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்று (06) ஆரம்பித்து உரையாற்றிய சபாநாயகர், இந்த செயற்குழுவின் தலைவராக வைத்தியர் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த செயற்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி சுரேன் ராகவன், டயானா கமகே, கலாநிதி ஜி.எல். பீரிஸ், சட்டத்தரணி ரவுப் ஹக்கீம், விஜித ஹேரத், கலாநிதி சரத்வீரசேகர, நிரோசன் பெரேரா, அஜித் மன்னப்பெரும, நிமல் லன்சா, துஷார இந்துநில், வைத்தியர் காவிந்த, ஹேஷான் ஜயவர்தன, அகில எல்லாவல, நாலக பண்டார கோட்டேகொட, சட்டத்தரணி மதுர வித்தானகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.