கொம்பனிதெரு யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனிவீதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (4) மாலை 5.00 மணியளவில் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
24வயதுடைய குறித்த சீன நபர் உதவி பொறியாளராக பணியாற்றியவராவார்.