கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரவுள்ளதால், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு கோரிக்கை
Related Articles
கொஹுவல புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்படுவதால் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை தொடர்ந்து பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மே மாதம் 31 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் நிறைவடையவிருந்த போதிலும், இரண்டு மாதங்களுக்கு இது தொடரும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, 120 பஸ் பாதை மற்றும் தெஹிவளை – நுகேகொட பாதையில் கொஹுவல சந்திக்கு அருகில் வாகன போக்குவரத்து ஜூலை 31 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொஹுவளையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.