fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டியவர்களின் பட்டியல்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2023 12:04

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டியவர்களின் பட்டியல்

இன்று (01) முதல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பின்படி,

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்த வைத்தியர்கள்
இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்
இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்
இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
இலங்கை கட்டிடக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
இலங்கையின் அளவு ஆய்வாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்
பிரதேச செயலாளரின் கீழ் வணிகங்களை பதிவு செய்த நபர்கள்
மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைக் கொண்ட நபர்கள் (முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள் தவிர)

அத்துடன் 2023 டிசம்பர் 31 ஆம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024 ஜனவரி ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு 18 வயதை அடையும் அனைத்து நபர்களும் இந்த புதிய விதிக்கு உட்பட்டவர்கள்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 1, 2023 12:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க