fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இணையம் மூலம் கடவுசீட்டுக்களை விண்ணப்பிக்கும் புதிய முறைமை அடுத்தமாதம் 15ற்கு முன்னர்

ITN News Editor
By ITN News Editor மே 31, 2023 12:29

இணையம் மூலம் கடவுசீட்டுக்களை விண்ணப்பிக்கும் புதிய முறைமை அடுத்தமாதம் 15ற்கு முன்னர்

இணையம் மூலம் கடவுசீட்டுக்களை விண்ணப்பிக்கும் புதிய முறைமையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஜூன் மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அவரது கூற்றுப்படி, நாட்டின் எந்த மாகாணத்திலும் வசிப்பவர் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் தனது வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று புதிய முறையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும், மேலும் உங்கள் கைரேகைகளை வழங்கிய பின்னர், நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.

ஐம்பது (50) பிரதேச செயலக அலுவலகங்களில் கைரேகை எடுக்கும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை ஏற்கனவே நிறுவியுள்ளதுடன், தபால் திணைக்களத்தினால் இதற்கான புதிய கூரியர் (Courier) சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையில் தரகர்கள் சட்டவிரோதமான முறையில் ஈடுபடுவதாக ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததையடுத்து, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2023 12:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க