இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி (29) நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி நேற்று (28) நடைபெறவிருந்த போதிலும் மழை குறுக்கிட்டதால் போட்டியை இன்று நடத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி இன்று (29) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன்களுக்கு 20 கோடி இந்திய ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும், அதன் மதிப்பு இலங்கை நாணயத்தின் 70 கோடிக்கும் அதிகமாகும். இரண்டாம் இடத்தைப் பெறுபவர்களுக்கு 13 கோடி இந்திய ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும், இது இலங்கை நாணயத்தின் 45 கோடிக்கும் அதிகமாகும்.