பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல்
Related Articles
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷாஎதிரிசூரிய கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இந்தநிலையில்,குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கனிணி விசாரனைப்பிரிவு அதிகாரிகளால் அவர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து, நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.