அமைச்சர்கள் குழு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது.
ஜப்பானில் இருந்து வார இறுதியில் நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த பேச்சுக்களின் பின்னணியில் இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல நிதிச் சட்டமூலங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பில் ஆராயப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.