அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தில் உயிரிழப்பு
Related Articles
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 10.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூஎல் 605 என்ற விமானத்தில் வருகைத்தந்த 75 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த விமானம் தமது பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.