இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்
Related Articles
இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது
இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.