யூரியா உரம் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு
Related Articles
யூரியா உரம் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உரங்களின் விலை 500 ரூபாவால் குறைக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வரும் யூரியா கப்பலில் இருந்து வரும் உரம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும்
அரை ஹெக்டேயருக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இலவச யூரியா தொட்டி வழங்கப்படும் எனவும் அதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.