மிகிந்தலை பொசன் பண்டிகைக்காக அரசாங்கம் ரூ 31 இலட்சம் ஒதுக்கீடு

ITN News Editor
By ITN News Editor மே 24, 2023 12:33

மிகிந்தலை பொசன் பண்டிகைக்காக அரசாங்கம் ரூ 31 இலட்சம் ஒதுக்கீடு

அனுராதபுரத்தை மையமாக கொண்டு நடைபெற்று வரும் பொசன் பண்டிகையின் அடிப்படை நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 31 இலட்சம் ரூபாவை வழங்கியதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக எஞ்சிய நிகழ்வுகளுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் .

மேலும், மிஹிந்தல ரஜமஹா விகாரையில் நடைபெறும் திருவிழா நடவடிக்கைகளுக்கு மாத்திரமே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும், அட்டமஸ்தான மற்றும் பொசன் பிரதேசத்திற்கான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொசன் விழா நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பணம் வழங்காததால் பிண்டபட சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதாவது பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மிஹிந்தல ரஜமஹா விகாரையின் பீடாதிபதி தம்மரதன தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor மே 24, 2023 12:33