ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் உயிரிழப்பு
Related Articles
ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், 38 வயதுடைய சந்தேகநபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.