29 வயதான உணவக உரிமையாளர் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
Related Articles
கல்கிசையில் 29 வயதான உணவக உரிமையாளர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பலாப்பழம் ஒன்றின் விலை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து குறித்த நபர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹபுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்த நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கல்கிசை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.