இந்த ஆண்டு இறுதிக்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு
Related Articles
கடவுசீட்டுகளை பெற்றுக்கொள்ள இலகு வழிகளை அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-கடவுச்சீட்டு வழங்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அடுத்த மாதத்திற்குள் கடவுசீட்டுகளை இலகுவில் பெற்றுக்கொள்ள 50 இடங்களில் புகைப்படம் எடுப்பதையும், 50 வட்டாரச் செயலக அலுவலகங்களில் கைரேகை எடுப்பதையும் நிறுவுவதாக இதன்போது தெரிவித்துள்ளார்.
“அதன்படி யாரும் இங்கு வர தேவையில்லை. உங்கள் கிராமத்தில் உள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று முதலில் விண்ணப்பத்தை இணையத்தில் அனுப்பிவிட்டு அங்கு சென்று படம் எடுக்கவும். கைரேகைகளையும் அங்கேயே பதிவிட வாய்ப்புக்கள் உண்டு. மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை நேரடியாக அவர்களது வீட்டிற்கு அனுப்புவோம்” எனவும்
இந்த ஆண்டுக்குள் இ-பாஸ்போர்ட் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனவும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்