fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மன்னிப்புக் கோரினாலும் மதபோதகர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணையை நிறுத்த முடியாது

ITN News Editor
By ITN News Editor மே 22, 2023 14:45

மன்னிப்புக் கோரினாலும்  மதபோதகர்  மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில்  விசாரணையை நிறுத்த முடியாது

மத நிந்தனை கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிருக்கின்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தான் நிச்சயமாக இலங்கைக்கு திரும்புவேன் என்றும் தனது கருத்து பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு ஏதேனும் காயத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

போதகர் பெர்னாண்டோ, நேற்று மிரிஹானவில் நடைபெற்ற கூட்டுப்பிரார்த்தனையில் காணொளி மூலம் கலந்துகொண்டார். அதன்போதே தாம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், தனது மன்னிப்பு உண்மையைப் பிரசங்கித்ததற்காக அல்ல என்றும் தமது கருத்து ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்திருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறினார்.

“நான் நற்செய்தி உண்மையைப் பிரசங்கித்தேன், நான் பைபிளில் உள்ளதைப் பிரசங்கித்தேன், அது இன்னும் பைபிளில் உள்ளது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, என் பௌத்த சகோதரர்கள், இந்து சகோதரர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

இலங்கையில் உள்ள பௌத்த மதகுருமார்களிடம் நான் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டிரான் அலஸ், தாம் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரியதால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை நிறுத்த முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

“யாராவது தவறு செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டால் விசாரணையை கைவிட முடியாது. அது நடக்காது. இந்த வழக்கில் நடக்காது. சி.ஐ.டி. தான் இதைச் செய்கிறது. இது தொடர்பாக சி.ஐ.டி.க்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளன. அந்த பிரசாரம் மற்றும் அவரது மற்ற பிரசாரங்கள் பற்றி அனைத்தும் சிஐடியால் விசாரிக்கப்படுகிறது.

நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது. அப்படியானால் அப்படிப்பட்ட வழக்கில் எந்த ஒரு நபரும் இலங்கைக்கு வரும்போது, ​​அவர்கள் வரும் சாதாரண வழி, விமான நிலையம், அவர்களை அங்கேயே சிஐடியிடம் ஒப்படைக்கவும், பின்னர் சிஐடி விசாரித்து, அறிக்கை எழுதி, அவரை வீட்டுக்கு அனுப்பலாமா? நீதிமன்றங்கள் அமைக்கப்படுமா, அது சிஐடி வேலை…” எனத் தெரிவித்திருந்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 22, 2023 14:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க