வாக்குசீட்டுகள் அச்சடிப்பது தனியாருக்கு
Related Articles
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் உட்பட தேர்தலின் போது செய்யப்படும் அனைத்து அச்சிடும் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க அச்சகம் போன்ற நிறுவனங்கள் இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக எதிர்வரும் தேர்தலில் அச்சடிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளுக்கு பணம் பெறும் முறை தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கருத்து வெளியிட்டார்.